ஃப்ளிப்கார்ட்டின் ‘பை பை சேல் 2025’ விற்பனை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பொருட்களில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் சிறப்பு சலுகைகள் உள்ளன. புத்தாண்டுக்கு முன் பழைய ஃபோனை மாற்ற நினைப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பு.
சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா: குறைந்த விலையில் கிடைக்கும் டாப் மாடல்
2024-இன் மிகச் சிறந்த ஸ்மார்ட்போனாகப் புகழ்பெற்ற சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா (256GB, டைட்டானியம் பிளாக்) இப்போது ரூ.98,989-க்கு கிடைக்கிறது. இது அசல் விலையிலிருந்து ரூ.31,000+ தள்ளுபடி!
கூடுதல் சலுகைகள்:
ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் கார்டு: ரூ.4,000 கேஷ்பேக் – மொத்த விலை ரூ.94,989 ஆகிறது (மொத்த சேமிப்பு ரூ.35,000!).
எஸ்பிஐ கார்டு: ரூ.1,000 தள்ளுபடி.
பழைய ஃபோன் பரிமாற்றம்: ரூ.57,409 வரை (ஃபோன் நிலைக்கு ஏற்ப).
