88 வயதில் டிகிரி பெற்ற தாத்தா

280
Advertisement

88 வயதில் பட்டம்பெற்றுள்ள தாத்தாவின் வீடியோ அனைவருக்கும்
தன்னம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் லெனேஹன் 1956ஆம் ஆண்டில் நியூ
யார்க்கில் உள்ள டோர்ஃபார்ம் பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்தார்.
பட்டப்படிப்பு நிறைவுபெறுவதற்கு சுமார் 7 மாதங்களுக்கு முன் தனது 20
வயதில் இராணுவத்தில் வேலைகிடைத்துக் கல்லூரியைவிட்டு வெளியேறினார்.

இராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தொழில் மற்றும் வணிகத்தில்
ஈடுபட்டு வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்தார். தற்போது அவருக்கு
6 குழந்தைகளும் 13 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், 20 வயதில் பாதியில் விட்டுவிட்ட கல்லூரிப் படிப்பை நிறைவு
செய்வதற்காக, மீண்டும் கல்லூரிக்குச்சென்று 66 ஆண்டுகளுக்குப்பிறகு
படித்துப் பட்டம்பெற்றுள்ளார் லெனேஹன்.

கல்வி கற்பதற்கு வயது தடையல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த
தாத்தாவின் செயல்.