இறந்துபோன மனைவிக்காக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் தாத்தா

112
Advertisement

https://www.instagram.com/p/Cc-WKZejqT9/?hl=en

இளமையில் உடலைப் பேணுவதில் ஆர்வம் காட்டுவோர் அதிகம்.
கட்டழகு உடலோடு கன்னியரைக் கவர்வதில் இளைஞர்கள்
ஆர்வமாக இருப்பர். திருமணம் ஆனதும் உடற்பயிற்சி
செய்வதையே அடியோடு மறந்துவிடுவர்.

மிக அரிதாக சிலரே… திருமணமான பின்பும் உடற்பயிற்சி
செய்வதில் அக்கறை கொள்வர்.

Advertisement

ஆனால், ஹரியானாவைச் சேர்ந்த திரிபத் சிங் என்கிற 76 வயது
தாத்தா, தன் மனைவி இறந்த பின்பும் அவருக்காக ஜிம்மே கதியெனக்
கிடக்கிறார். 30 வயதைக் கடந்தாலே பலர் தொந்தியும் தொப்பையுமாகக்
காட்சியளிக்கும் இக்காலத்தில் 25 வயது இளைஞரைப்போலத்
துள்ளிக் குதித்து கடுமையான ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை
மேற்கொள்கிறார்.

இந்தத் தாத்தாவுக்குத் தொந்தியும் இல்லை. தொப்பையும் இல்லை.
நோயுமில்லை., கவலையுமில்லை. இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா..?

இவரது மனைவி இறந்து 21 வருடங்களாகின்றன. இரண்டு மகன்கள்,
மனைவி குடும்பம், வியாபாரம் என்ற பரபரப்பாக வாழ்ந்த இந்த
சிங்கத்துக்கு மனைவி மறைந்ததும் வாழ்க்கையே சூனியமாகிப்போனது.

இதனால் இந்தத் தாத்தா பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளார்.
வியாபாரத்தைக் கைவிட்டுவிட்டார். பல்வேறு மனக்கஷ்டங்களோடு
வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் அவரது கஷ்டங்களுக்கு அருமருந்தாக அமைந்தது
ஒரு கனவு… ஒரு நாள் இந்தத் தாத்தாவின் கனவில் இறந்துபோன அவரின்
மனைவி வந்துள்ளார். மனைவி கனவில் வந்ததும் அவருக்குள் தவிப்பு
ஏற்பட்டது. அவரது தவிப்பை உணர்ந்த அன்பு மனைவியின் அறிவுரைகள்
அவருக்குள்ளிருக்கும் மனக்கஷ்டங்களை மாயமாய் மறையச் செய்துவிட்டன.

அப்படி மனைவி என்ன சொன்னார்…

”அத்தான்… நீங்க என்னோடப் பிரிவத் தாங்க இருக்கறத நெனச்சு எனக்கு
ரொம்பக் கவலயா இருக்கு. என்னைக் கல்யாணம் பண்ணின
சமயத்துல நீங்க எவ்வளவு அழகா இருந்தீங்க…

நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் தெனமும் ஜிம்முக்குப் போயி உங்க
உடம்ப எவ்வளவு கட்டுமஸ்தா வச்சிருந்தீங்க.. உங்களால என்னப்
பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

நீங்க கவலப் படாதீங்க….நான் மேல இருந்து உங்களப் பாத்துக்கிட்டுதான்
இருக்கேன். நீங்க மனந்தளராம எப்பவும்போல ஜிம்முக்குப் போங்க…
எப்பயும்போல ஆரோக்யமா இருங்க…அத்தான்”

அப்படின்னு சொன்னாராம். உடனே இந்தத் தாத்தா ரொம்ப குஷியாயிட்டார்.
மறுநாளே மறுபடியும் ஜிம்முக்கு போக ஆரம்பிச்சுட்டார். மனைவிக்காக
உடலையும் மனசையும் ஊக்குவிக்க ஆரம்பிச்சார்.

மனைவி சொன்னதுக்காக மாமிச உணவையும் துறந்தார். மனைவி
கொடுத்த ஊக்கத்தால இப்ப தொழில்லயும் கலக்குகிறார்…

தான் பெற்ற இந்த உந்துதல் மத்தவங்களுக்கும் பயன்படட்டும்னு
தன்னோட உடற்பயிற்சிப் படங்கள சமூக வலைத்தளங்கள்ல
பகிர்ந்துக்கிட்டும் வர்றார். இவரோட இன்ஸ்டாகிராம் வலைத்தளத்த
71 ஆயிரம்பேர் இவரப் பின்தொடர்றாங்களாம்.

கிடைக்கிற ஒவ்வொரு நொடியையும் ஜிம்முக்குப் போய் பயன்படுத்திக்கிறாரு
இந்த முன்னாள் இளைஞர். 76 வயதிலும் ஆரோக்யமா இருக்கார். உடல்
ஆரோக்கியம்தான் விலைமதிக்க முடியாதுன்னு உணர்ந்துட்டார்போலும்
இந்தப் பெரியவர்.

வயதாகிவிட்டதே என்ற சோர்ந்திருக்காமல்…இளைஞனைப்போல்
சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

நீங்களும் இப்பவே உடற்பயிற்சி செய்யுங்க…எப்பவும் இளைஞனா வாழுங்க…

மனைவி அமைவதெல்லாம்……இறைவன் கொடுத்த வரம்…எனச்
சொல்லும் இந்த தாத்தா மனைவி சொல்லே மந்திரம் என்பதைக்
கடைப்பிடிக்கிறார்.

”எந்த வயதிலும் உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வதற்கு
வயோதிகம் தடையல்ல”என்கிறார். ”என் தந்தை சர்க்கரை நோயால்
அவதிப்படுவதை அருகிலிருந்து பார்த்தேன். நானும் நீரிழிவு நோயாளி
ஆகக்கூடாது என்ற வைராக்கியமாக இருந்தேன். ஒரே முறையில்
500 தண்டால் எடுத்துவிடுவேன்”என்கிறார் சண்டிகரில் ரெடிமேடு
ஜவுளிக்கடை வைத்திருக்கும் திரிவத் சிங்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும்
இவரது உடற்பயிற்சி தங்களுக்கு ஊக்கமளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.