Thursday, May 1, 2025

இனிமேல் அரசு ஊழியர்கள் இப்படி லீவு எடுத்தால் நடவடிக்கை – அதிரடி முடிவு

மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தில் மிக முக்கியமான ஒன்று பேருந்து போக்குவரத்து ஆகும்.. அவ்வப்போது ஏதேனும் அறிவிப்புகளை கொடுக்கும் அரசு போக்குவரத்துத் துறை தற்போது செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.. அதாவது அதில், தினமும் பேருந்து ஓட்ட வேண்டிய டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் முதல் நாளே Control Chart-ல் கையெழுத்து போட வேண்டும்.

அது மட்டுமின்றி ஒருவேளை டிரைவர் அல்லது நடத்துனர் மாலை 5 மணிக்குள் லீவு கேட்டால், உடனே வேறொருவரை வைத்து பேருந்தை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பணிக்கு வராமல் முன் அறிவிப்பின்றி விடுமுறை எடுக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்.
அது மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் காலை மற்றும் மாலை நேரங்களான Peak Hours நேரத்தில் இயக்கப்படும் General Shift பேருந்துகளை எக்காரணம் கொண்டு Single Shift ஆக இயக்க படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news