எலான் மஸ்க், உலகையே தன் டெக்னாலஜியால் மிரள வைக்கும் இந்த நபர். இப்போது இந்தியாவுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துவிட்டார். அவருடைய ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவைக்கு, இந்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதனால் BSNL, Jio, Airtel எல்லாம் காணாமல் போய்விடுமா? இனி இன்டர்நெட் ரொம்ப மலிவாகிடுமா? இந்தக் கேள்விக்கு, மத்திய அரசே ஒரு ஆச்சரியமான பதிலைச் சொல்லியிருக்கிறது.
மத்திய அமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ஸ்டார்லிங்க்கால் BSNL-க்கு எந்த ஆபத்தும் இல்லை. ஏன் அப்படிச் சொன்னார்? அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் மூன்று:
ஒன்று, ஸ்டார்லிங்க்கால் இந்தியா முழுவதும் வெறும் 20 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் இணைப்பு கொடுக்க முடியும்.
இரண்டு, இதன் மாதாந்திரக் கட்டணம் சுமார் 3,000 ரூபாய் வரை இருக்கும். இது சாதாரண மக்களுக்கானதல்ல.
மூன்றாவதாக, ஸ்டார்லிங்கின் முக்கிய இலக்கு, நகரங்கள் இல்லை. சிக்னலே இல்லாத கிராமங்களும், மலைப் பகுதிகளும்தான். அதனால், நமது டெலிகாம் நிறுவனங்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு வராது என்பது அரசின் கணக்கு.
சரி, லைசென்ஸ் கிடைத்துவிட்டது. ஆனால், கதை இத்துடன் முடியவில்லை. இந்திய அரசு சில முக்கியமான நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
ஸ்டார்லிங்க், தனது மொத்த வருமானத்தில் 4 சதவீதத்தை அரசுக்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று TRAI பரிந்துரைத்துள்ளது. இதனால், நகரங்களில் ஸ்டார்லிங்க் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு செலவு இன்னும் கொஞ்சம் அதிகமாகலாம். ஆனால், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் கிடையாது.
மொத்தத்தில், எலான் மஸ்க் இந்தியாவுக்குள் வந்திருக்கிறார். ஆனால், அரசின் கடுமையான கட்டுப்பாடுகளோடும், அதிக விலையோடும் வந்திருக்கிறார். அவருக்கு ஐந்து வருடங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது கேள்வி இதுதான். இந்த அதிக விலை கொண்ட ஸ்டார்லிங்க், கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்றுமா? அல்லது இது வெறும் பணக்காரர்களுக்கான சேவையாக மட்டுமே இருக்குமா?
மாசம் 3000 ரூபாய் கொடுத்து, யாரு இந்த ஸ்டார்லிங்க்க வாங்குவாங்க? இது உண்மையிலேயே ஒரு கேம் சேஞ்சராக இருக்குமா? என people பலரும் இதற்கு react பண்ணுறாங்க.