சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்க்கு காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை தீயணைப்புத்துறையினரும் விரைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
