Wednesday, October 8, 2025

Google தரும் 26 லட்சம்! ‘இதை’ மட்டும் செஞ்சா போதும்!

நீங்க கூகிள் கிட்ட இருந்து 26 லட்சம் ரூபாய் ஜெயிக்க முடியும்னு சொன்னா நம்புவீங்களா? அதுவும் சும்மா இல்லை, கூகிளோட ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், அதாவது AI-ல இருக்கிற தப்பைக் கண்டுபிடிச்சா போதும்!

ஆமாங்க, கூகிள் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டிருக்கு. அவங்களோட AI சிஸ்டம்களில் இருக்கிற பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு 30,000 டாலர், அதாவது இந்திய ரூபாயில் சுமார் 26 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் பரிசு கொடுக்கப் போறாங்களாம்.

இந்தத் திட்டத்தோட பெயர் ‘AI பாதிப்பு வெகுமதி திட்டம்’ அதாவது, AI VRP. இதுல, நீங்க கண்டுபிடிக்கிற பிழைக்கு அடிப்படையா 20,000 டாலர், அதாவது 17 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒருவேளை நீங்க கண்டுபிடிக்கிற பிழை ரொம்பவே புதுமையா, முக்கியமானதா இருந்துச்சுன்னா, எக்ஸ்ட்ராவா ஒரு 10,000 டாலர், அதாவது 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் போனஸா கிடைக்கும்!

சரி, என்ன மாதிரி தப்பைக் கண்டுபிடிக்கணும்னு கேக்குறீங்களா?

உதாரணமா, கூகிள் ஹோம் மாதிரி ஒரு சாதனத்தை ஏமாற்றி, ஒரு வீட்டோட ஸ்மார்ட் கதவைத் திறக்க வைக்கிறது.

இல்லன்னா, ஒருத்தரோட ஈமெயில், முகவரி, பேங்க் விவரங்கள் மாதிரி முக்கியமான தனிப்பட்ட தகவல்களைக் கசிய வைக்கிறது.

நம்ம பாஸ்வேர்டைத் திருடறதுக்கு அந்த AI மறைமுகமா உதவி செஞ்சா, அதையும் சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனா, அந்த AI-யோட மூளையையே, அதாவது அதோட தொழில்நுட்ப ரகசியங்களையே திருட முடிஞ்சாலும், அது ஒரு பெரிய பிழைதான்.

ஆனா ஒரு முக்கியமான விஷயம். AI தப்பு தப்பா கதை சொல்றது, தேவையில்லாத விஷயங்களைப் பேசுறது, வெறுப்புப் பேச்சுகளை உருவாக்குறது மாதிரியான விஷயங்களை ரிப்போர்ட் செஞ்சா பரிசு கிடைக்காது. அதையெல்லாம் நாம தயாரிப்புக்குள்ளேயே இருக்கிற ஃபீட்பேக் (Feedback) பட்டன் மூலமாதான் சொல்லணும்.

இந்தத் திட்டம் கூகிளோட முக்கிய தயாரிப்புகளான ஜெமினி (Gemini), கூகிள் சர்ச், ஜிமெயில், டிரைவ் எல்லாத்துக்குமே பொருந்தும்.

இது ஒன்னும் புதுசு இல்லை. கடந்த ரெண்டு வருஷத்துல மட்டும், கூகிள் இதே மாதிரி AI தவறுகளைக் கண்டுபிடிச்சவங்களுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் டாலர் கொடுத்திருக்காங்க. போன வருஷம் மட்டும் எல்லாவிதமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 12 மில்லியன் டாலர் பரிசா கொடுத்திருக்காங்க.

சோ, நீங்க ஒரு டெக் ஆர்வலரா, எத்திக்கல் ஹேக்கரா இருந்தா, இது உங்களுக்கு ஒரு சூப்பரான வாய்ப்பு. கூகிளோட ‘பக் ஹன்டர்ஸ்’ (Bug Hunters) வெப்சைட்ல போய் நீங்களும் முயற்சி பண்ணிப் பார்க்கலாம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News