கூகுளில் யாராவது இடியட் என்று ஆங்கிலத்தில் தேடும்போது, கிடைக்கும் ஏராளமான புகைப்படங்களில் டொனால்ட் டிரம்ப் புகைப்படமே முன்னிலை வகிக்கிறது. இது தொடர்பாக நீதிமன்ற விசாரணையின்போது, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் விடியோ அண்மையில் சமூக ஊடகத்தில் வைரலாகியிருந்தது.
சுந்தர் பிச்சை அளித்த பதிலில், கூகுள் இணையதளத்தில், எந்த தேடுதல் முடிவுகளும் மனிதர்களால் அல்லது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்படுவதில்லை. ஏற்கனவே, இணையதளத்தில் புகைப்படம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பெயர்களை கூகுள் ஸ்கேன் செய்து பட்டியலிட்டு வைத்திருப்பதையே, தேடும்போது முடிவுகளாகக் காட்டுகிறது.
இணையதளத்தில் மக்கள் என்ன சொல்கிறார்கள், சேர்க்கிறார்கள், தேடுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. அதிக பயனர்கள், டிரம்ப் புகைப்படத்துடன் இந்த வார்த்தையை இணைக்கும்போது அதனை தேடுதலின் முடிவாகக் காட்டுகிறது.