நீங்கள் கூகுளின் புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால், தற்போது Google Pixel 9 போனை மிகச் சிறந்த தள்ளுபடியுடன் குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போனை வங்கி சலுகையின் கீழ் வெறும் ரூ.54,399க்கு வாங்கலாம். இந்த போனின் உண்மையான அறிமுக விலை ரூ.79,999 ஆகும். கூகுள் ஸ்டோர் தள்ளுபடியாக ரூ.21,600 மற்றும் வங்கி ஆபராக ரூ.4,000 என மொத்தம் ரூ.25,600 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Google Pixel 9 போன், கூகுளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.58,399 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், Google Store ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் ரூ.21,600 மற்றும் வங்கி ஆபர் ரூ.4,000 ஆகியவற்றை பயன்படுத்தினால், இந்த போனை ரூ.54,399 என்ற குறைந்த விலையில் வாங்க முடியும். இதன் மூலம், பேங்க் ஆபர் மற்றும் கூகுள் ஸ்டோர் தள்ளுபடி சேர்த்து மொத்தமாக ரூ.25,600 சேமிக்கலாம்.
Google Pixel 9 ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 1080 x 2424 பிக்சல்கள் தீர்மானம், 120Hz வரை ரிஃப்ரெஷ் ரேட், 2700 nits அதிகபட்ச பிரைட்னஸ் மற்றும் HDR ஆதரவு வழங்கப்படுகிறது. மேலும், இந்த டிஸ்ப்ளே Gorilla Glass Victus 2 மூலம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த போனில் கூகுளின் Tensor G4 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 12GB வரை ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. மேலும், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4700mAh பேட்டரியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா அம்சங்களைப் பொருத்தவரை, Google Pixel 9 பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் OIS வசதியுடன் 50MP பிரைமரி கேமரா மற்றும் 48MP அல்ட்ரா-வைடு லென்ஸ் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 10.5MP முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது.
