கூகிள் மீட் என்பது ஒரு வீடியோ தொடர்பு தளமாகும். இது ஆன்லைன் வகுப்புகள், தொலைதூர நேர்காணல்கள் போன்றவற்றிக்கு பயன்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் திடீரென கூகுள் மீட் சேவை முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எவ்வளவு முயற்சித்தும் உள்ளே நுழைய முடியாத விரக்தியில் சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
கூட்டங்களில் சேர முயற்சிக்கும் பலர், “502. அது ஒரு பிழை” என்ற செய்தியுடன் வரவேற்கப்பட்டதாகக் கூறினர். பயனர்கள் X இல் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொண்டனர். நாடு முழுவதும் பிரச்சனை பரவியதால் பயனர்கள் தங்களது விரக்தியை வெளிப்படுத்தினர்.
