வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான
தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அம்சங்களை
வலைத்தளங்களில் புகுத்தி வருகிறது. அந்த வகையில்,
உலகளவில் அதிகம்பேரால் பயன்படுத்தப்பட்டு வரும்
வாட்ஸ் அப்பில் புதிய அம்சங்களைக் கொண்டுவரத்
திட்டமிட்டுள்ளது மெட்டா நிறுவனம்.
தற்போது ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில்
தங்களின் ரியாக்ஷனை சாட் பாக்ஸில் பயனாளர்கள்
தெரிவிக்கும் வசதி உள்ளது. இதனால் சாட்செய்பவர்களின்
உள்ளுணர்வை சட்டென்று உணர்ந்துகொள்ள முடிகிறது.
அந்த வசதி தற்போது வாட்ஸ் அப்பிலும் வரவுள்ளது.
வாட்ஸ் அப்பில் emoji. Filter ஆகிய வசதிகளை
அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
தற்போது 100 MB அளவுள்ள Filesஐ மட்டுமே வாட்ஸ்
அப்பில் அனுப்பமுடியும். இந்த அளவை 2 giga byte
அளவுக்கு அதிகரிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் வாய்ஸ் காலில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, தற்பொழுது
வாய்ஸ் காலில் 8 பேருடன் மட்டுமே தொடர்புகொள்ள முடியும்.
இந்த எண்ணிக்கையை 32 ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு குழுவில் உள்ள பயனாளர் எவரேனும் பிரச்சினைக்குரிய
கருத்தைத் தெரிவித்திருந்தாலோ, பதிவிட்டிருந்தாலோ அதனை
நீக்கும் வசதி இனி குரூப் அட்மினுக்கே வரவுள்ளது. இதனால்
தொல்லை இன்றி குரூப்பை இயக்கலாம்.
நமது தொடர்புப் பட்டியலில் இல்லாத எண்ணுக்கும் வாட்ஸ்
அப் மூலம் தகவல் அனுப்பும் வசதியும் வருகிறது. விரைவில்
வரவுள்ள இந்தப் புதுவசதிகளால் வாட்ஸ் பயனாளிகள்
மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.