தமிழக அரசை பொறுத்தவரை, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு அறிவிப்புகளையும், வெவேறு வகையான வசதிகளையும் செய்து வருகிறது. இதனால் ரேஷன் அட்டைதாரர்களின் நடைமுறை மேலும் எளிமையாகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரேஷன் கடைகளின் மூலம் ஜவ்வரிசியையும் விற்பனை செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை வலுத்து வருகிறது. ஏனெனில், தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 85,000 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. இந்நிலையில் குறிப்பாக, மரவள்ளிக்கிழங்கில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 90 சதவீத ஜவ்வரிசி தமிழகத்தில் உள்ள ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் சேலம் சேகோ சர்வ் செயலாட்சியரான கீர்த்தி பிரியதர்ஷினி, தொழில் துறை வணிக இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், ‘பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியால் செய்யப்பட்ட உணவுகளைக் கொடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதோடு ரேஷன் கடைகள் மற்றும் ஆவின் பாலகங்களில் ஜவ்வரிசியை விற்கவும் விரைவில் அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படும். இதுதவிர ஆவின் பாலகங்கள் வாயிலாகவும் ஜவ்வரிசியை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் விரைவில் அரசு தரப்பிலிருந்து சீக்கிரத்தில் நல்ல செய்தி வெளியிடப்படும் என்றே தெரிகிறது.