29.06.2026; வார தொடக்கத்தில் குட் நியூஸ் … எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.13,370-க்கும் விற்பனையான தங்கம், நேற்று அதே விலையிலேயே நீடித்தது.

இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த நுகர்வோருக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தங்கத்தின் விலை இன்னும் உயர்ந்த நிலையிலேயே இருப்பதால், முதலீட்டாளர்களும் பொதுமக்களும் சந்தை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News