கர்ப்பிணியைக் காப்பாற்றியவர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்

182
Advertisement

மாடியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பூனையைக்
காப்பாற்றியவர்களுக்குத் தலா 10 லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டுள்ளது-

பூனையைக் காப்பாற்றும் இந்த வீடியோவைத் துபாய் நாட்டுத்
துணை அதிபர் ஷேக் முகமது தனது ட்டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது-

துபாயில் டெய்மார் நகரின் அல்மார் பகுதியில் கேரள மாநிலத்தவர்கள்
அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்துவருகின்றனர். இவர்களில்
சிலர் தங்கள் வீடுகளில் பூனைகளை வளர்த்துவருகின்றனர்.

சில மாதங்களுக்குமுன்பு இரண்டாவது மாடியில் ஒரு பூனை விளையாடிக்
கொண்டிருந்தது. திடீரென்று பால்கனிக்குச் சென்ற பூனை வீட்டுக்குள்
வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. மேலும், சுவரிலிருந்து கீழே
விழும் நிலைக்குச் சென்றது-

இதைப் பார்த்த அப்பகுதிவாசியான நசீர் பூனையைக் காப்பாற்ற
தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு யுக்தியைக் கையாண்டார்.
பூனை தத்தளித்துக்கொண்டிருக்கும் சுவரையொட்டி ஒரு பெரிய
துணியை வலைபோல விரித்துப் பிடித்தார்.

பூனையும் அதிர்ஷ்ட வசமாக அந்தத் துணியில் விழுந்தது-
எந்தப் பாதிப்பும் இன்றி உயிர் தப்பியது. இந்தத் தகவலை
அறிந்த அந்நாட்டுத் துணை அதிபர் ஷேக் முகமது கர்ப்பிணிப்
பூனையைக் காப்பாற்றிய அனைவருக்கும் தலா 10 லட்ச ரூபாய் பரிசளித்தார்.

இதுபற்றிக் கூறியுள்ள ஷேக் முகமது, ”அழகான துபாய் நகரில்
நடந்த இந்த அன்புமிக்க செயலைக்கண்டு பெருமையும்
மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.