ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் வெளியானதற்கு 2 மணி நேரம் கழித்து அதன் ப்ரீ-புக்கிங்கும் தொடங்கியது. படம் ரிலீஸாக இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில், முன்பதிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.
அந்த வகையில் குட் பேட் அக்லி படம், இப்போது வரை, ப்ரீ-புக்கிங்கில் மட்டும் சுமார் ரூ.18 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.