இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் “இளமை இதோ இதோ” உள்ளிட்ட இளையராஜா இசை அமைத்த பல்வேறு பாடல்கள் பயன்படுத்தபட்டுள்ளது. இதையடுத்து தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ.5 கோடி கேட்டு படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த வழக்கு விசாரணையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில், இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை பயன்படுத்த பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
படத்தில் இடம் பெற்ற பாடல்களை ஒழுங்காக உரிமையை பெறாததால் படத்தில் இடம் பெற்ற பாடல்களை படக்குழு நீக்குவர் மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தும் குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.