மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை பார்த்த பலரும் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வெளியாகியது.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் முதல் நாளில் ரூ.28.50 கோடி வசூல் செய்துள்ளது. வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.