‘பீஸ்ட்’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகர் ஷைன் டாம் சாக்கோ அண்மையில் வெளியான ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் மீது மலையாள நடிகை வின்சி அலோசியஸ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷைன் டாம் போதையில் தன்னை நாகரிகமற்ற வகையில் அணுகியதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிகை வின்சி அலோசியஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். “நான் எந்தவித உள் நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை. என்னுடைய இயல்பான பேசும் பாணியே அப்படித்தான். ஆனால் இனிமேல் இதுபோன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.