மருத்துவர்களாக மாறிய குரங்குகள்! ஆச்சரியம் ஆனால் உண்மை

275
Advertisement

நாய்கள் மற்றும் பூனைகள் புல் சாப்பிடுவதை பார்த்து வியந்திருப்போம். ஆனால் அதற்கு பின் உள்ள அறிவியல் காரணம், எந்த புல்லை உண்டால் நச்சுக்கள் வெளியேறி உடல் சுத்தமாகுமோ, அவற்றை தான் அவை சாப்பிடும்.

இயற்கையாகவே, விலங்குகளுக்கு தங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உள்ளது.

இது போன்ற உள்ளுணர்வுகள் விலங்குகள் பல நோய்களை தடுக்க, மற்றும் பாதித்த நோய்களில் இருந்து விரைவில் விடுபடவும் உதவுகின்றது. இந்த குணாதிசயத்திற்கு golden rumped tamarin வகை குரங்குகளும் விதிவிலக்கல்ல.

பிரேசில் நாட்டின் சௌ பவ்லோ (Sau Paulo) மாநில பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் tamarin வகை குரங்குகள் தங்களின் நோய்க்கு பிரத்யேகமான மருத்துவத் தீர்வை கண்டுபிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

அழிந்து வரும் இனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இவ்வகை குரங்குகள் கொசுக்களால் பரப்பப்படும் மஞ்சள் காய்ச்சலுக்கு அடிக்கடி ஆளாவது வழக்கம். இந்த நோய்க்கான மருந்தை குரங்குகளே கண்டறிந்தது தான் ஆச்சரியம்.

இயற்கையாகவே antibiotic, ஒட்டுன்னி எதிர்ப்பு மற்றும் அழற்சி நீக்கும் குண நலன்களை கொண்ட கப்ரூவா மரம் வெளியிடும் பிசினை தங்கள் உடலில் தேய்த்து கொள்வதன் மூலம் இக்குரங்குகள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வதாக கூறப்படுகிறது.

பட்டை, கிராம்பு, தேன் மற்றும் பைன் போல வாசனை வரும் கப்ரூவா மரப் பிசினில் முழுமையாக கண்டறியப்படாத பல மருத்துவ பயன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.