சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் கண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டாலும், தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 10-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் விலை படிப்படியாக அதிகரித்து, கடந்த 18-ந்தேதி கிராம் ரூ.14,290-க்கும், சவரன் ரூ.1,14,320-க்கும் விற்பனையானது.
அதன்பிறகு ஒருநாள் காலையில் விலை குறைந்த நிலையில், மாலையில் திடீரென உயர்ந்தது. நேற்று கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.14,710-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
