தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.35 ஆயிரம் என்ற அளவில் விற்பனையான நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.
ஆனால், அமெரிக்கா-ஈரான் இடையிலான போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விட வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.240 குறைந்து ரூ.14,015க்கும், ஒரு சவரன் ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.245க்கும், கிலோ பார் ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
