Friday, December 5, 2025

கடும் சரிவில் தங்கம் விலை., அப்போ இது வீழ்ச்சியின் ஆரம்பமா?

உலக பொருளாதாரத்தில் சமீப ஆண்டுகளில் நிகழ்ந்த அதிர்வுகள் பல நாடுகளை தங்கள் நாணய கையிருப்பை தங்கத்தை நோக்கி மாற்ற வைக்கின்றன. குறிப்பாக BRICS கூட்டணியில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் தங்கத்தின் சேமிப்பை வேகமாக உயர்த்தி வருகின்றன.

இதற்கான முக்கிய காரணம் டாலர் ஆதிக்கத்திலிருந்து விடுபடுதல். உலகளாவிய வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலர் மூலம் நடைபெறுவதால், அந்த நாட்டின் பணவியல் கொள்கைகள் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. இதனை சமநிலைப்படுத்த BRICS நாடுகள் தங்கம் மற்றும் தங்கள் சொந்த நாணயங்களில் பரிவர்த்தனை செய்யும் முயற்சியை வலுப்படுத்தி வருகின்றன.

மேலும், உலக அரசியல் பதட்டங்கள் – குறிப்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைச் சட்டங்கள் – இந்த நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி போல் இருந்தது. தங்கம் மட்டுமே எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத சொத்து என்பதால், அதனை பாதுகாப்பான சேமிப்பாக கருதுகின்றன.

2023–24ம் ஆண்டுகளில், சீனாவும் ரஷ்யாவும் தங்கள் மத்திய வங்கிகளின் தங்கக் கையிருப்பை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியுள்ளன. இந்தியாவும் ரிசர்வ் வங்கியின் மூலம் தங்க முதலீட்டை மெதுவாக அதிகரித்து வருகிறது.

ஆய்வாளர்கள் கூறுவதாவது என்னவென்றால், “தங்கம் என்பது BRICS நாடுகளுக்கு நிதி சுயாட்சிக்கான அடித்தளம்” என்பது தான். உலக பொருளாதார மையத்தை டாலர் மையத்திலிருந்து மாற்றும் நீண்டகால முயற்சியில், தங்கம் தான் அவர்களின் பொருளாதார ஆயுதம் ஆகும்.

இந்நிலையில் கடந்த வாரம் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்தது. இதனால் முதலீட்டாளர்கள் கையில் உள்ள தங்கத்தை விற்று அதை டாலராக மாற்றினார். தொடர்ந்து, சந்தையில் தங்கத்தின் விலை வெகுவாகக் ஆட்டம் கண்டது. இந்த திடீர் வீழ்ச்சி தங்கத்தின் தொடர்ச்சியான ஏற்றம் குறித்த நம்பிக்கையில் இருந்த பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இருப்பினும் BRICS நாடுகள் தங்கத்தில் முதலீட்டை அதிகரிப்பதால், உலகளவில் தங்கத்திற்கான தேவை மேலும் உயரும். இதன் விளைவாக தங்கத்தின் நுகர்வும் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News