தங்கம் விலை மாற்றம்… இன்றைய நிலவரம்….

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது. கடந்த 29-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,640-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,120-க்கும் விற்பனையானது. இதையடுத்து 30-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,09,680-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அக்டோபர் 1-ந்தேதி தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,09,440-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.1,09,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

Related News

Latest News