“ஏதோ குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து சின்ன சின்ன தோடு, Chain, மோதிரம் மாதிரியான நகைகள் தான் எங்களால வாங்கிப்போட முடிஞ்சிருக்கு…” என்று வருத்தப்படாதீர்கள். இப்பொழுது இருக்கும் நிலவரத்தை பார்த்தால் நீங்கள் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. லாபம் என்றால் லாபம்… உங்களுக்கு தான் சரியான லாபம் கொட்டப்போகிறது.
ஏனென்றால் சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் உங்கள் வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு கிராம் தங்கமும் உங்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்க இருக்கிறது. அது எப்படி என்று விளக்குகிறது இந்த பதிவு.
ஒரு சின்ன Recap… 2008ல் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறை தரைதட்டிய நிலையில் உலக மார்க்கெட் கபளீகரமானது. அப்போது இந்தியா மட்டும் எப்படி தப்பித்தது தெரியுமா? இந்தியாவில் வீடுகளில் வாங்கி வைத்த தங்கம். இல்லத்தரசிகள் வாங்கி வைக்கும் சிறிய சிறிய நகைகள் பொருளாதார சரிவை தடுத்தது என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது அவசரத்திற்கு தங்கத்தை அடகு வைத்து liquid cash ஆக மாற்றி பின்னர் மீட்டுக்கொள்ள முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. தற்போது மீண்டும் 2008 சூழல் கண்முன் வந்து நிற்கிறது. நிலைமை இப்படி இருக்க கொஞ்சம் தங்கம் கூட எப்படி லாபகரமானதாக இருக்க முடியும்?
1. தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால் உங்கள் வீட்டில் உள்ள தங்கத்தின் மதிப்பும் வேகமாக உயரும். 2. SIP தொடங்கி தினசரி trading வரை எந்த ஒரு முதலீட்டிலும் வர முடியாத அளவிற்கு இதில் உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே வருவாய் வர வாய்ப்புள்ளது. 3. கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை 30% அதிகரித்திருப்பதால் இந்த அளவிற்கு Return கொடுக்க கூடிய investment எதுவும் இல்லை. இதெல்லாம் உங்களுக்கு செம்ம லாபம் தான் 4வது Point, உங்கள் வீட்டில் உள்ள கொஞ்சம் தங்கம் கூட உங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதுகாப்பு. தேவையான நேரங்களில் இதை அடகு வைத்து liquid cash ஆக மாற்றி பிறகு மீட்டுக்கொள்ள முடியும்.
5. பொதுவாக உலகம் முழுக்க நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக பணத்தின் மதிப்பு குறைவதால் பணம் என்பது Just பேப்பர்தான். பணவீக்கம் காரணமாக இன்று நீங்கள் 50 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கினால் அடுத்த சில மாதங்களில் 100 ரூபாய் கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கும். இதற்கு பெயர் தான் பண மதிப்பு சரிவது என்பது. அப்படி இல்லாமல் பணத்தை சேமிப்பதற்கு பதிலாக தங்கத்தை சேமித்தால் நிலைமையே தலை கீழ்… தங்கத்தின் மதிப்பு உயரும். 6. பொருளாதார சரிவு ஏற்பட்டு பணம் மதிப்பு சரியும் போதெல்லாம் தங்கத்தின் மதிப்பு உயர்வது என்பதே எழுதப்படாத சட்டம். எனவே உங்கள் வீட்டில் உள்ள சிறிய சிறிய தங்கத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதே புத்திசாலித்தனமானதாக இருக்கும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதனை கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.