Wednesday, April 2, 2025

ஏப்ரலில் ஷாக் கொடுக்கப்போகும் தங்கம்! இது தான் அந்த காரணம்! 3100 மார்க்கை கிராஸ் செய்த அதிர்ச்சி!

அமெரிக்க விலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,100 டாலரை எட்டிப்பிடித்து நடுத்தர மக்களை விழிபிதுங்க வைத்துவிட்டது. ஏப்ரலில் இந்த விலையை தங்கம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் கடைசி நாளிலேயே இந்த தொகையை அடைந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. தற்போது இது 3104 டாலராக உள்ளது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம். அதாவது கிட்டத்தட்ட மூன்றரை சவரன்.

இதன் மூலம் அடுத்த ஏப்ரல் மாதம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,65,574 ஆக உயர்ந்திருப்பது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை. சென்னயில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 9,191 ரூபாயாகவும் ஆகவும் 22 கேரட் தங்கம் 1 கிராம்  8,425 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 6,950 ஆகவும் விற்கப்படுகிறது.

அமெரிக்காவில் வட்டியை நிர்ணயம் செய்யும் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி அதாவது FOMC ஃபெடரல் வட்டி நிதி விகிதத்தை 4.25% முதல் 4.5% வரையிலான வரம்பிற்குள் வைப்பதாக அறிவித்தது. இதன் பொருள், தற்போது உள்ள வட்டி விகிதத்தை குறைக்கவோ, ஏற்றவோ இல்லை என்பதே.

ஆனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த வட்டி புள்ளிகள் குறைக்கப்பட்டால் நிச்சயமாக டாலர் மதிப்பு சரிந்து வரும் நாட்களில் தொடர்ந்து டாலர் மதிப்பு சரியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என்று ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி அதாவது FOMC அறிவித்து விட்டதால் இனி டாலர் விகிதம் சரிவை நோக்கியே செல்லும் என்பதால் டாலர் மதிப்பு சரிவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் தங்கத்தின் மதிப்பிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை இமாலய உச்சத்தை அடையும் என்று கணிக்கப்படுகிறது.

Latest news