கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 7-ந்தேதி விலை சற்று உயர்வை கண்டது. அதாவது, அன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.14.150-க்கும், சவரன் ரூ.1.13.200-க்கும் விற்பனையானது.
பின்னர் தங்கம் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. தொடர்ச்சியாக 3 நாட்கள் அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனிடையே, தங்கம் விலை நேற்று முன்தினம் மாற்றத்தை கண்டது. இதைத் தொடர்ந்து, நேற்றும் தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை யாரும் எதிர்பாராதவிதமாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
அதாவது, இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200க்கு விற்பயனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15,400க்கு விற்பனையானது.
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.8,560 கூடியதாக சொல்லப்படுகிறது.
