Sunday, April 20, 2025

ரம்ஜான் பண்டிகை : எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை

ரம்ஜான் பண்டிகையையொட்டி எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆடுகளை வாங்க நேற்று மாலை முதலே வியாபாரிகள் குவிந்தனர்.

7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரையும், ஜோடி ஆடுகள் 15 ஆயிரத்திலிருந்து 23 ஆயிரம் ரூபாய் வரையும் செம்மறி கிடாய் 16 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையாகின. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news