15 லட்சத்துக்கு ஏலம்போன ஆடு

603
Advertisement

ஆடு ஒன்று 15 லட்சத்துக்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு நியூசௌத்வேல்ஸ் மாகாணத்திலுள்ள கோபார் நகரில் அண்மையில் 17 ஆடுகள் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டன. அதில் ஓர் ஆடு இந்திய மதிப்பில் 15 லட்சத்து 60 ரூபாய்க்கு விற்பனையாகி‘ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த ஆடு இதற்கு முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. ப்ரோக் என்ற ஆடு 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதே சாதனையாக இருந்தது.

அந்த ஆட்டை வாங்கிய ஆண்ட்ரூ மோஸ்லி என்ற நபர் இவ்வளவு விலைகொடுத்து வாங்கியதற்கு சொன்ன காரணம் விசித்திரமானது…

மராகேஷ் ஸ்டைலாக உள்ளது. ஆரோக்கியமாக உள்ளது என்றுகூறி அதிக விலைகொடுத்ததற்கான தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார் ஆண்ட்ரூ.

ஆட்டுப் பண்ணையும் மாட்டுப் பண்ணையும் வைத்துள்ளார் ஆண்ட்ரூ.
ஆஸ்திரேலியாவில் கடந்த 5 ஆண்டுகளாக மராகேஷ் ஆட்டிறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்து நாட்டின் எல்லையோரம் வளர்க்கப்பட்ட இந்த ஆடு மிகவும் அரிதான மராகேஷ் என்னும் இனத்தைச் சேர்ந்தது.. நிறைய குட்டிகளை ஈனும் திறன்கொண்டதாம். மராகேஷ் ஆடுகள் விரைவில் வளர்ந்துவிடுமாம்.