அரசு மருத்துவரை கோபமாக திட்டிய கோவா சுகாதார அமைச்சர்

வயதான பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்காத அரசு மருத்துவரை கோவா சுகாதார அமைச்சர் கோபமாக திட்டியதுடன் அவரை உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.

கோவா சுகாதார துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே, கடந்த 7ம் தேதி கோவா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது வயதான பெண் ஒருவருக்கு ஊசிபோட மருத்த புகாரில் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிகரை அழைத்து கடுமையாக எச்சரித்ததுடன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.

மூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானதையடுத்து, கோவா அமைச்சரின் இந்த செயலுக்கு கோவாவில் உள்ள இந்திய மருத்துவர் சங்க கிளையும் கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ கோவா மருத்துவக் கல்லூரியில் நடந்த பிரச்சினையை தான் மறுபரிசீலனை செய்து, சுகாதார அமைச்சருடன் கலந்து பேசியதாகவும் மருத்துவர் ருத்ரேஷ் குட்டிகர் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

Latest News