Thursday, April 17, 2025

இந்த 2 பேருல ‘ஒருத்தருக்கு’ ‘என்னோட’ இடத்தை கொடுத்திருங்க

நடப்பு IPL தொடரில் சென்னை அணியின் நிலைமை படுமோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் விளையாடினாலும் கூட அணியில், தமிழக வீரர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்னும், குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே CSK மீது இருக்கிறது.

தற்போது மோசமாக அடுத்தடுத்து தோற்பதால், மீண்டும் சர்ச்சைகள் சென்னை அணியை கழுகு போல வட்டமிட ஆரம்பித்துள்ளன. இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற மீட்டிங்கில், தோனி மனந்திறந்து பேசி இருக்கிறாராம்.

நான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வை அறிவித்து விடுவேன். என்னுடைய இடத்தை அன்ஷூல் கம்போஜ்  அல்லது ராமகிருஷ்ணா கோஷ் இருவரில் இருவருக்கு அளித்து விடுங்கள். இருவருமே நல்ல ஆல்ரவுண்டர் பினிஷர்கள் தான். இவ்வாறு சமீபத்திய மீட்டிங்கில் தோனி உருக்கமாகப் பேசினாராம்.

இதை வைத்துப் பார்க்கும்போது தொடரின் பாதியிலேயே, தோனி தன்னுடைய ஓய்வினை அறிவித்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை

Latest news