கின்னஸ் உலக சாதனைகளின் மிகவும் விரும்பப்படும் மற்றும் பரபரப்பாகப் போட்டியிட்ட தலைப்புகளில் ஒன்றான சாப்பிடும் போட்டியில் ஒரு பெண் ஒரு நிமிடத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த உணவு பிரியை லியா ஷட்கெவர் என்பவர் தான் இந்த உலக சாதனையை படைத்துள்ளார். எற்கனவே சாப்பிடும் போட்டிகளில் 27 உலக சாதனைகளை படித்துஉள்ளார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ” ஒரு நிமிடத்தில் 352 கிராம் சிக்கன் நக்கட்ஸ் ” உணவை சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் நியூசிலந்தை சேர்ந்த உணவு பிரியை நெலா சிஸ்ஸெர் ஒரு நிமிடத்தில் 298 கிராம் சாப்பிட்டதே சாதனையாக கருதப்பட்டது. 2013 ஆம் ஆண்டு தன் 23 வயதில் தனது சகோதரரின் சவாலால் ஈர்க்கப்பட்டு போட்டித்தன்மையுடன் சாப்பிடத் தொடங்கியதாகவும் , ” நீங்கள் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடையும்போது, உங்கள் தன்னம்பிக்கை வளர்கிறது, அது என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறுகிறார் லியா ஷட்கெவர்.