ipl ஆட்டத்தின் நடுவே பெண் செய்த காரியம்-வைரல் வீடியோ

279
Advertisement

இந்த சிங்கஸ் இருக்காங்களே ரொம்போ நல்லவங்க… கமிட் ஆனவங்க கூட ரம்போ எல்லாம் தொடர்பு வெச்சிக்கமாட்டாங்க.குறிப்பா இந்த கபிள்ஸ் இருக்க இடத்துக்கு போகவே மாட்டாங்க, அப்டியே போனாலும் அவங்கள கண்டிருக்க மாட்டாங்க.

இப்படி இருக்க சிங்கிள்ஸ்எ வெறுப்பேற்றும் விதம் சில சம்பவங்கள் நடந்துவிடுகிறது.இப்பொது  எல்லாம் பொது இடத்தில்  , காதலை வெளிப்படுத்துவது “ட்ரெண்ட்”. 

வெளிநாடுகளில் மற்ற விளையாட்டு போட்டியில் இந்த சம்பவம் நடைபெறுகிறது என்றால் ,நம்ப ஊர்ல..  ipl போட்டியில் இது போன்ற சம்பவம் ஒரு நடைறையாகவே மாறிவிட்டது.

இந்நிலையில் ,

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 சீசனின் 49வது ஆட்டம், புனேவில் உள்ள எம்சிஏ ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் கடைசி ஒரு சில ஓவர்கள் இருக்க,ரசிகர்களும் தங்கள் அணிகளை உற்சாகம் படுத்திகொண்டு  இருந்தனர்.எங்கடா  ஆட்டம் முடிய பொதுதே , இன்னும் எந்த சம்பவமும் நடக்கலையே என கேமரா மேன் தேடிக்கொண்டு இருக்க , பெண் ஒருவர் தன் ஆண் நண்பரின் முன் மண்ணடியிட்டு கையில் மோதிரத்தை காட்டி தன் காதலை வெளிப்படுத்தினார்.

ரசிகர்களுக்கு மத்தியில் இதை எதிர்பார்த்திராத அந்த நபர்,இன்ப அதிர்ச்சியில் உறைந்தபடி நிற்க , சுற்றியுள்ளவர்கள் இந்த அழகான தருணத்தை தங்கள் போன்களில் படம்பிடித்தனர்.

இந்த வீடியோவை முன்னாள் இந்திய வீரர்  வாசிம் ஜாஃபரும் தன் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.