Wednesday, February 5, 2025

தந்தையை நினைத்து மகள் செய்த காரியம்

ஆயிரம் உறவுகளின்  அரவணைப்பு , தந்தையின் அரவணைப்புக்கு ஈடாகாது என்பதை உணர்த்தும் பல தருணங்களை நம் வாழ்வில் உணர்த்துருப்போம் . இணையத்தில் இது போன்ற பல வீடியோ உள்ளது. தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஒரு மகள் மற்றும்  அவளுடைய தந்தைக்கும் இடையிலான அன்பின் பிணைப்பை உணர்த்தும்  இந்த வீடியோ இணையவாசிகளை  உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.  

வீடியோவில், தனது தந்தை வணிக பயணங்களில் இருந்தபோது தனக்கு எழுதிய அஞ்சல் அட்டைகளைப் பற்றி மகள் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பயனர் லாரன் ரோசா மில்லர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இதயங்களை உருக்கும் விதம் உள்ளது.

https://www.instagram.com/p/Cbqxm55lia2/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

 “தந்தையின் அன்பு நிகரற்றது.இத்தனை வருடங்கள் கழித்து அவர் இவற்றை எனக்காக வைத்திருந்தார், நான் அவருடைய பராமரிப்பாளராக மாறும் வரை எனக்குத் தெரியாது.

நான் அவருடைய எல்லா பொருட்களையும் சரிசெய்துகொண்டுருந்தபோது , இந்த கடிதங்களை  வெளியே எடுத்து , முகத்தில் சிரிப்புடன் என்னிடம் கொடுத்தார்.

நான் அவரை மிகவும் இழக்கிறேன், ஆனால் அவரது அன்பை நான் தினமும் நினைவுபடுத்துகிறேன்.. ! ”  என இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் இந்த பெண்.

இந்த வீடியோவில் உள்ளதை கவனித்தால் , அந்த பெண் தந்தையின் கடிதங்களை போட்டோ பிரேம் செய்து செய்து சுவர் முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளார். அதில் , அந்த தந்தை தன் மகளுக்கு எந்த பயணத்தின் போது அந்த கடிதத்தை எழுதினார் …என்ன எழுதினார்…? என அனைத்தும் நன்றாக தெரிகிறது. 

அங்குள்ள அணைத்து கடிதமுமே தன் மக்களிடமிருந்து வெகுதூரம் பயணித்தபோது ,மகளின் பிரிவின் உணர்வுகளை எழுத்துக்களாக விவரிக்கும் விதம் உள்ளது.

நம் வாழ்வில் ஒன்றிபோகும் இந்த உணர்வு , இணையவாசிகளை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

Latest news