Sunday, May 11, 2025

Girls கவனத்திற்கு; என்னாது!! சர்க்கரையை தவிர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?? 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு வகையான உணவுகளை பலர் விரும்பி சாப்பிடுவார்கள்.. அந்த இனிப்பு வகை உணவில் இனிப்பிற்காக சர்க்கரையை கலக்கப்படுகின்றன ..

சர்க்கரை என்பது இனிப்பு சுவை கொண்ட ஒரு கார்போஹைட்ரேட் ஆகும், இது உணவில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருளாகும். சர்க்கரை, பல வகைகளில் காணப்படுகிறது, ஆனால் சுக்ரோஸ், குளுக்கோஸ், பிரக்டோஸ் இது போன்றவை பொதுவானவை ஆகும்.

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.. சர்க்கரை தவிர்த்தால் என்னென்ன பலன்கள் இருக்கு என்பது பற்றி தெரியுமா?

சர்க்கரை தவிர்ப்பதால் உற்சாகமாக மாற்றி, சோர்வைப் போக்கவும் உதவுகின்றது என்கின்றனர் வல்லுநர்கள்
சக்கரை நோய் இருப்பவர்கள் உணவில் இருந்து சர்க்கரையைத் தவிர்த்தால் இரத்த சர்க்கரையின் அளவும் குறையும் என்கின்றனர்.

அது மட்டுமின்றி தொடர்ந்து ஒரு 30 நாளுக்கு சர்க்கரை தவிர்ப்பது சருமத்தை பொலிவாக்கவும் அழகாக்கவும் தெரிவும் என்கின்றனர்.அதனோடு சர்க்கரையைத் தவிர்ப்பதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாகவும், ஈறுகள் வலுவாகவும் இருக்கும். சர்க்கரை எடுத்துக்கொள்ளும் போது முகப்பரு வர வாய்ப்பு உள்ளதால், சர்க்கரையைத் தவிர்ப்பதன் மூலம் முகப்பரு குறையும் என்கின்றனர்..

கொலஸ்ட்ராலை உள்ளவர்கள் சர்க்கரை தவிர்த்தல் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் நல்லது என்று தெரிவிக்கின்றன.சர்க்கரை உட்கொள்ளலைத் தவிர்ப்பது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி குறிப்பாக உங்களது உணவில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர நினைத்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனையோடு மற்ற வேண்டும்

Latest news