ஏப்ரல் 6ம் தேதி சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராஜீவ்காந்தி மைதானத்தில் எதிர்கொண்டது. RCBயை அடித்த தெம்போடு குஜராத்தும், மீண்டும் ஒரு தோல்வியை தடுத்திடும் முனைப்பில் ஹைதராபாத்தும் விளையாடின.
இதில் வெற்றி குஜாரத்துக்கே. SRH பரிதாபகரமாக 4வது தோல்வியைத் தழுவி, பாயிண்ட் டேபிளின் கடைசியில் கிடக்கிறது. இந்தநிலையில் மைதானத்தில் நடந்த ஒரு சம்பவம், தற்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
போட்டியின் 6வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். Strikeல் நின்ற இஷான் கிஷன் பந்தைத் தட்டிவிட்டு சிங்கிள் ஓடினார். அந்த பந்தைத் தடுத்து ஸ்டம்பில் எறிய முயற்சி செய்த GT வீரர் Glenn Phillips காயமடைந்து மைதானத்திலேயே, சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அணியின் பிசியோதெரபிஸ்ட் ஓடிவந்து, Phillipsக்கு முதலுதவி செய்தார். பின்னர் Phillips கைத்தாங்கலாக, மைதானத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் கேப்டன் கில் இதுகுறித்து சிறிதும் கவலைப்படாமல், இஷான் கிஷனுடன் சிரித்துப் பேசி என்ஜாய் செய்து கொண்டிருந்தார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இதைப்பார்த்த ரசிகர்கள், ”சொந்த டீம்ல ஒரு மனுஷன் அடிபட்டு கெடக்குறாரு. ஆனா கேப்டனுக்கு அதுபத்தி கொஞ்சமும் அக்கறையே இல்ல”, என்று, அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.