Saturday, August 30, 2025
HTML tutorial

கொழுந்தியாளை கல்யாணம் பண்ணி வைங்க.., நூதன போராட்டம் நடத்திய வாலிபர்

உத்தரப் பிரதேசம், கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்த ராஜ் சக்சேனா என்பவருக்கு கடந்த 2021-ஆம் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது மனைவி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து தனது மனைவியின் சகோதரியை ராஜ் சக்சேனா திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது மனைவியின் மற்றொரு தங்கை மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து தனது மனைவியிடமே ராஜ் சக்சேனா வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன ராஜ் சக்சேனாவின் மனைவி, அவரை கடுமையாக திட்டி வாக்குவாதம் செய்துள்ளார்.

இதையடுத்து மின்சார கோபுரத்தின் மீது ஏறி, ‘எனது கொழுந்தியாளை காதலிக்கிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கத்தி கூச்சலிட்டு ராஜ் சக்சேனா போராட்டம் நடத்தியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜ் சக்சேனாவை 7 மணி நேரத்திற்கும் மேலாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இறுதியாக அவரது மனைவியின் தங்கையை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளிக்கப்பட்ட பிறகே, ராஜ் சக்சேனா கீழே இறங்கி வந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எனது கொழுந்தியாளும் என்னை காதலிக்கிறார். நானும் அவரை விரும்புகிறேன். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்’ என்று கூறினார். இதனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News