பீட்சா சாப்பிடுங்க 5 லட்சம் பெறுங்க..

238
Advertisement

பீட்சாவை சாப்பிட்டு அதன் நிறை, குறைகளைச் சொல்வதற்கு 5 லட்ச ரூபாய் சன்மானம் தருவதாக இங்கிலாந்தின் முன்னணி பீட்சா நிறுவனங்களில் ஒன்றான பீட்சா ஹட் அதிரடியாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல பீட்சா தயாரிப்பு நிறுவனமான பீட்சா ஹட் சில மாதங்களுக்குமுன்பு இரண்டுவிதமான பீட்சாக்களைத் தயாரித்தது. இந்த பீட்சாக்களை வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் அதன் தரத்தையும் சுவையையும் கூட்ட விரும்பியது.

அதற்காகத் தாங்கள் தயாரித்துள்ள இரண்டு பீட்சாக்களின் சுவை, தரம் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் வாயிலாக அறிந்துகொள்ள பீட்சா ஹட் விரும்பியது. இதற்காகப் புதுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

Advertisement

அந்த அறிவிப்பில், தங்களின் புதிய வகை பீட்சாக்களை சாப்பிட்டு சுவை பார்த்து நிறை, குறை இரண்டையும் உணர்ந்தறிந்து சொல்ல ஆட்கள் தேவை என்றும், இதற்காக தேர்வாகும் நபர்களுக்கு 5 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் Chief Crust Tester என அழைக்கப்படுவார்கள்.

தாங்கள் தயாரிக்கும் புதுவித பீட்சாக்களை Chief Crust Tester சாப்பிட்டு திருப்தியடைந்தால்தான், வாடிக்கையாளர்களுக்கு அதேவிதத்தில் புதிதாக பீட்சா தயாரித்து வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

விநோதமான வேலைக்கு விநோதமான போட்டிமூலம் தேர்ந்தெடுக்கப்படும் முறை வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பீட்ஸா பிரபலமானதோ இல்லையோ அதன் சுவையை ருசித்துச்சொல்ல பணியாட்களைத் தேர்ந்தெடுக்கும் முறை சட்டென்று பிரபலமாகிவிட்டது.