பணத்திற்காக 90 முறை கொரோன தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்

287
Advertisement

ஜெர்மனி நாட்டில் சுமார் 90 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபரை காவல்துறை  கைது செய்துள்ளது.

“கொரோனா” உலக நாடுகளை புரட்டிபோட்ட வைரஸ் தொற்று. சீனாவில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவியது.லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொரோன தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. முகக்கவம் , ஊரடங்கு , தடுப்பூசி என பல்வேறு நடவடிக்கைகளால் கொரோன கட்டுப்படுத்தப்பட்டது.


கொரோனவை பரவலை தடுக்க தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அணைத்து வயதினர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மறுத்துவிட்டனர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தான் பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை பூர்த்திசெய்யும் வகையில் பணிகளுக்கு அனுமதி என்ற சம்பந்தப்பட்ட அரசுகள் உத்தரவிட்டன. 

இந்நிலையில், ஜெர்மனி நாட்டில், 90 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயது முதியவரை காவல்துறை கைது செய்துள்ளது .

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் இல்லாதவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்கள் சார்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், மேலும் அவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான பாசை வழங்கியதாகவும் தெரிய வந்தது.