Friday, April 25, 2025

சுந்தர் சி -வடிவேலு காம்போவில் வெளியான கேங்கர்ஸ் : முதல் நாள் வசூல் எவ்வளவு?

“வின்னர், லண்டன், கிரி, தலைநகரம், நகரம்” படங்களுக்கு பிறகு சுந்தர் சி -வடிவேலு காம்போவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. சுந்தர் சி. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி -வடிவேலு கூட்டணியில் இப்படம் வெளியாகி உள்ளது. ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வெளியான முதல் நாள் வசூலில் தமிழ்நாட்டில் ரூ.1 கோடியே 16 லட்சம் வசூல் செய்துள்ளது. நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news