மனிதனை எட்டி உதைத்த கங்காரு

370
Advertisement

மனிதனை எட்டி உதைத்த கங்காருவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஒருவர் தனது குடும்பத்தினரையும் வளர்ப்பு நாய்களையும் நடைப்பயிற்சிக்காகக் காட்டுக்குள் அழைத்துச்சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்குள்ள ஊருணி ஒன்றில் அவரது நாய் ஒன்று தண்ணீர் பருகத் தொடங்கியது.

அதைப் பார்த்த கங்காரு ஒன்று ஓடிவந்து நீர்பருகிக்கொண்டிருக்கும் நாயைத் தாக்கத் தொடங்கியது. அதைத் தடுக்கமுயன்றார் எஜமானர். அவரையும் கால்களால் உதைத்துத் தள்ளியது அந்தக் கங்காரு.. அதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார் அவர்.

இந்த நிலையில் மற்றொரு நாய் தனது எஜமானரையும் சகாவையும் காப்பாறற ஓடிவருகிறது. ஆனால், அந்த நபரின் குடும்பத்தினரோ நடந்த நிகழ்வுகளை செல்போனில் பதிவுசெய்து மகிழ்ந்துள்ளனர்.

பொதுவாக, கங்காருக்கள் கடுமையான மற்றும் மிருகத்தனமான சண்டைகளுக்குப் புகழ்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது, தங்கள் எதிரிகளை உதைத்துக் குத்துச்சண்டையில் ஈடுவது கங்காருக்களின் வழக்கம்.

அந்த வகையில், நாய்களோடு, மனிதரையும் எதிரியாகக் கருதி தாக்கியுள்ள செயல் சமூக ஊடகத்தில் வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது.