Saturday, May 10, 2025

“அஜித் படம், அதெல்லாம் ஒன்னும் இல்லை, எங்க பாட்டுதான் காரணம்” – கங்கை அமரன் பேட்டி

இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் “இளமை இதோ இதோ” உள்ளிட்ட இளையராஜா இசை அமைத்த பல்வேறு பாடல்கள் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா ரூ.5 கோடி கேட்டு படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்க்கு விளக்கமளித்த படக்குழு சம்பந்தப்பட்ட இசை கம்பெனிகளிடம் முறையே அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்தினோம் என கூறியது.

இந்நிலையில் இளையராஜாவின் தம்பி கங்கை அமரனிடம் பேசியதாவது : என் அண்ணனிடம் இல்லாத பணமா? அவரிடம் கொட்டி கிடக்குது. செலவழிக்க முடியாமல் தவித்து வருகிறோம். நீங்க சொந்தமா பாட்டு போடுங்க. அப்படியே நீங்க பாட்டு போட்டும் ஜெயிக்கலையே. நாங்க போட்ட பாட்டை பார்த்து தானே மக்கள் ரசிக்கிறார்கள், கைதட்டுகிறார்கள். அப்போ அந்த பாட்டில் எங்களுக்கு பங்கு இருக்கிறதுதானே? அதைத்தான் அண்ணன் கேட்கிறார்.

அஜித் படம், அதெல்லாம் ஒன்னும் இல்லை, எங்கள் பாட்டு, அவ்வளவுதான். உங்கள் இசையமைப்பாளரால் அதை செய்யமுடியவில்லை, எங்கள் பாடல்தான் ஜெயிக்க வைக்கிறது. அதை கேட்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக கொடுத்திருப்போம்’ என்றார்.

Latest news