உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கங்கை மற்றும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளும் பாஜக கூட்டணி கட்சியான நிஷாத் கட்சித் தலைவரும், மாநில மீன்வளத்துறை அமைச்சருமான சஞ்சய் நிஷாத் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்றுள்ளார். அப்போது ”கங்கை மாதா உங்கள் வீடு தேடி வந்து பாதங்களை சுத்தம் செய்துள்ளார். இது, உங்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும்,” என்றார்.
அவரது இந்த பேச்சு மக்கள் மத்தியில் கோபத்தை கிளப்பியது. இந்த, ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், ‘கங்கையின் ஆசிர்வாதத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என, ஒரு பெண் பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.