ஹரியானாவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பசுவுக்கு கட்டாயமாக மது கொடுத்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள் பசுவின் வாயை பலவந்தமாகத் திறந்து மது ஊற்றும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோவில், பசுவுக்கு மது கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அதனை வைத்து வண்டி இழுக்கச் செய்ததும் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, ‘எக்ஸ்’ தளத்தில் மத்திய அரசையும் ஹரியானா பாஜக ஆட்சியையும் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவோ, குற்றவாளிகளை கைது செய்யவோ முன்வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
