ஒரு பூனையை வெச்சுக்கிட்டி படும் பாடு…!

502
Advertisement

ஊர்ல 10 , 15 பூனை வெச்சிருக்கிறவங்க எல்லாம் சந்தோசமா இருகாங்க.. ஒரு பூனையை வெச்சுகிட்டு இவர் படும் பாட பாருங்க , என்பது போல உள்ளது இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ.

மனிதன் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் நாய்களும் பூனைகளும் குறிப்பிடத்தக்கவை. அழகிய உடலமைப்பு , அன்பு , குறும்பு , நட்பு என மனிதரிடத்தில் நெருங்கிப் பழகும் பூனைகளில் சில அரிதான மற்றும் அழகான பூனைகளும் இருக்கின்றன. இணையத்தில் இதை நிரூபிக்கும் பல வீடியோக்களும் உள்ளன. இதுபோன்று மற்றொரு வீடியோ தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது,

இந்த வீடியோவில் ,

ஒருவர் தினம் காலை குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திரிக்க டிஜிட்டல் கெடிகாரத்தில் அலாரத்தை அமைத்து விட்டு உறங்கியுள்ளார். இவர் நினைத்தது போல , முதல் நாள் காலை அந்த அலாரம் ஒலிக்கவில்லை.

சரியென்று , மறுநாள் மீண்டும் அதேபோல குறிப்பிட்ட நேரத்தை அமைத்துவிட்டு இரவு நன்றாக உறங்கியுள்ளார். மறுநாள் காலை அதேபோல அந்த அலாரம் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிக்காமால் வேறு நேரத்தில் ஓலித்து உள்ளது.

இதே போல தொடர்ந்து நடக்க , பொறுமை இழந்த அந்த நபர் இதற்கு காரணம் என்ன என தெரிந்துகொள்ள அலாரத்தின் அருகே கேமரா ஒன்றை பொறுத்து உள்ளார் .

மறுநாள் கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது தான் தெரிந்தது, இத்தனை நாட்கள் அலாரத்தின் நேரத்தை மாற்றி அமைத்து , அலாரத்தை அனைத்து வைத்தது.. வேறு யாரும் இல்லை அவரின் செல்லப்பிராணியான பூனை பார்தவேளை தான் இது என்று.

ஆம், டிஜிட்டல் சென்சார் என்பதால் அந்த பூனை தன் முகத்தை வைத்து கெடிகாரத்தின் திரையை தொட்டதன் மூலம் , தினம் அவர் வைக்கும் அலாரத்தின் நேரம் மாறி உள்ளது . இதேபோல தன் எஜமானர் உறங்கியபின் தினம் தினம் இதேபோல விளையாடி உள்ளது.

இதை தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அந்த நபர். குறும்புக்கார பூனையின் ரசிக்கும் படியான இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது . பலரும் அந்த பூனைக்கு ஆதரவாக வேடிக்கையான கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பொதுவாக பூனைகளை செல்ல பிராணியாக வளர்ப்பவர்களுக்கு 90% இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் எதுவும் தாக்காது என்று ஆய்வு கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.