சென்னை அண்ணா நகரில் பிரபல கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அந்த நிறுவனம் ரூ.50 ஆயிரம் சம்பளம் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பலமுறை கேட்டும் சம்பள பாக்கி கிடைக்காததால் விரக்தி அடைந்த ரமேஷ் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த புதிய காரை திருடியுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சம்பள பாக்கி ரூ.50 ஆயிரத்தை தராததால் காரை திருடியதாக ரமேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.