தங்கத்தைவிட COSTLYயான பழம் தங்கத்தைவிட அதிகமான விலைக்கு விற்கப்படும் பழம் பற்றிய தகவல் பழப்பிரியர்களை மிரள வைத்துள்ளது.

456
Advertisement

ஜப்பானின், ஹொகைடோ தீவில் உள்ள யுவரி என்னும் சிறு நகரில் வளர்க்கப்பட்டு விற்கப்படும் அந்தப் பழம்தான் உலகிலேயே அதிகமான, விலையுயர்ந்த பழம்.

அது எந்தப் பழம் என்றுதானே கேட்கிறீர்கள்…

யுவரி முலாம் பழம்தான் அந்தக் காஸ்ட்லியான பழம்.

இந்தப் பழத்தின் விலைக்கு ஒருவர் தங்கம் அல்லது சிறிய அளவு நிலத்தைக்கூட வாங்கிவிடலாம். அப்படியென்ன விலை என்கிறீர்களா…

ஒரு கிலோ யுவரி முலாம் பழம் 20 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. யுவரி முலாம் பழத்துக்கு இவ்வளவு விலையா என்று மலைக்கத் தோன்றுகிறதல்லவா? அதற்குக் காரணம் உள்ளது.

யுவரி நகரம் கடுமையான குளிர் நிலவும் பகுதி. அதிக அளவு மழைப்பொழிவும் கொண்டது இந்தப் பகுதி. எரிமலை சாம்பல் நிறைந்த இந்தப் பூமியில் பசுமைக்கூடாரங்களில் சூரிய ஒளி பாய்ச்சப்பட்டு முலாம் பழம் விளைவிக்கப்படுகிறது. குறைந்த அளவே விளைவிக்கப்படும் யுவரி முலாம் பழம் அதிகமான தித்திப்பும் நிறைவான ஊட்டச்சத்துகளும் மனம் விரும்பும் சுவையும் நிறைந்தது. அதனால்தான் யுவரி முலாம் பழத்தின் விலை அதிகமாக உள்ளது.

ஜப்பானில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கி சாப்பிடும் இந்த யுவரி முலாம் பழத்துக்குப் பணக்காரர்கள் மத்தியில் அதிகமான தேவை உள்ளது என்கிறது அங்கிருந்து வரும் தகவல்.