செயற்கையான குளிர்பானங்களுக்கு பதிலாக பழங்களை வைத்து தயாரிக்கப்படும் fresh juice ஆரோக்கியமான தேர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால், பழச்சாற்றை தவிர்க்க வேண்டிய சில தருணங்களை இப்பதிவில் பார்ப்போம்.
காலையில் எழுந்த உடன் பழச்சாறு பருகுவது கணையத்திற்கு அதிக வேலை கொடுக்கும். அது மட்டுமில்லாமல், அமிலத்தன்மை அதிகம் இருக்கும்.
பழச்சாறு குடித்து விட்டு உடனே உடற்பயிற்சி செய்ய கூடாது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது உடற்பயிற்சி செய்து அரை மணி நேரம் கழித்து தான் ஜூஸ் குடிக்க வேண்டும்.
விமானத்தில் பயணம் செய்வதற்கு முன் பழச்சாறு குடிப்பது, பயணத்தின் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும். படுக்க செல்லும் முன் பழச்சாறு குடிப்பதால் தூக்கமின்மை, உடல் பருமன் சிக்கல்கள் உருவாகும்.
பழத்தை விடவும் பழச்சாறு அதிக சக்கரையை உடனே ரத்தத்தில் கலப்பதால் நீரிழிவு நோயாளிகள் பழச்சாறு அருந்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.