Wednesday, December 17, 2025

இன்று முதல் இந்த பொருட்கள் ஜி.எஸ்.டி இல்லாமல் கிடைக்கும்

இதுவரை ஜிஎஸ்டி வரியுடன் வாங்கி வந்த சில பொருள்கள் இன்று முதல் பூஜ்ய வரியில் விற்கப்படும். இன்று முதல் ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வரும் நிலையில், ஜிஎஸ்டியே இல்லாமல் கிடைக்கும் பொருள்களின் பட்டியல் என்ன என்பதை பாப்போம்.

சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், காக்ரா, பிட்சா ரொட்டி, பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், கூந்தல் எண்ணெய், ஐஸ்கிரீம், தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்றவை.

தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகள் ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு பெற்றுள்ளன.

இந்திய ரயில்வேயில் விற்பனை செய்யப்படும் ரயில் நீர்: ரூ.15 இலிருந்து ரூ.14 ஆக குறைப்பு. அரை லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10 இலிருந்து ரூ.9 ஆக குறைப்பு.

வரைபடங்கள், சார்ட், பென்சில், அழிப்பான்கள், கிரையான்ஸ், நோட்டுப் புத்தகம், முட்டை, தயிர், லஸ்ஸி, பொட்டலமிடப்படாத உணவு தானியங்கள், கோதுமை மாவு, மைதா, காய்கறிகள், பழங்கள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள், தேர்வு செய்யப்பட்ட உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கும் இனி ஜிஎஸ்டி வரி இல்லை.

Related News

Latest News