உத்தரப்பிரதேச மாநில அரசு விரைவில் ‘No Helmet, No Fuel’ என்ற ஒரு புதிய 1 மாத சாலைப் பாதுகாப்புப் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது. இதன் கீழ் ஹெல்மெட் அணியாமல் வரும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்க மறுக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பிரச்சாரம் செப்டம்பர் 1 (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வரும், இது அந்த மாத இறுதி வரை நீடிக்கும். இந்தப் பிரச்சாரத்திற்காக முழுமையாக ஒத்துழைக்குமாறு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களும், அனைத்து எரிபொருள் நிலைய ஆப்ரேட்டர்களும் அரசின் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு வலியுறுத்தியுள்ளது.