Monday, August 18, 2025
HTML tutorial

இனிமேல் இவர்களுக்கெல்லாம் ‘whatsapp’ வேலை  செய்யாது! உஷாரா இருங்க..!

இப்போ பழைய ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாத மாதிரி, சில பழைய ஐபோன்களிலும் வாட்ஸ்அப் சேவை மே 5ஆம் தேதி முதல் நிறுத்தப்படப் போகுது. 

வாட்ஸ்அப்பை தினசரி நாம பலர் பயன்படுத்துறோம். குடும்ப தகவலா இருக்கட்டும், வியாபார விவரமா இருக்கட்டும், நிறைய முக்கியமான தகவல்கள் அதுலிருக்கும். அதனால்தான், பாதுகாப்பு இல்லாத பழைய வெர்ஷன்களில் வாட்ஸ்அப் இனிமேல் வேலை செய்யாமலிருக்க மெட்டா நிறுவனம் முடிவுசெய்திருக்கு. 

iOS 12 போன்ற மிகவும் பழைய வெர்ஷன்களில் மே 5ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது. முக்கியமாக iPhone 5s, iPhone 6, iPhone 6 Plus போன்ற மாடல்களில் iOS 12.5.7 தான் லாஸ்ட் அப்டேட். இதனால, இந்த மாடல்களில் இனிமேல் வாட்ஸ்அப் ஓடாது. 

மேட்டா ஏற்கனவே 2024 டிசம்பரில இந்த அறிவிப்பை கொடுத்திருக்கு. அதனால, 5 மாதங்களுக்கும் மேலா கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. யாராவது iOS 15.1க்கு கீழ் வெர்ஷன் வைத்திருக்கிறீங்கனா, உடனே அப்டேட் பண்ணிக்கணும். 

அப்டேட் பண்ண என்ன செய்யணும்? 

செட்டிங்ஸ் போயிட்டு, “General” என்பதை தட்டுங்கள். அதுல “Software Update” என்று வரும். அதுல அப்டேட் இருந்தா பண்ணிக்கோங்க. 

நீங்க அப்டேட் பண்ண முடியாத பழைய மாடல் தான் வைத்திருக்கீங்கனா, புதிய மாடலுக்கு மாற வேண்டியதுதான். இல்லன்னா வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. 

அதே மாதிரி, Android-ல கூட ஜனவரி 1ஆம் தேதி முதல் பல மாடல்களில் வாட்ஸ்அப் நிறுத்தப்பட்டுச்சு. Samsung Galaxy S3, Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini மாதிரியான மாடல்களும், Motorola Moto G First Gen, Sony Xperia Z, SP, V மாதிரியான மாடல்களும் இதில் சேரும். 

சாதாரணமாக ஒரு ஆப்ல இவ்வளவு மாற்றம்னா, அது நமக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுக்க வேண்டிய நேரம் இது தான். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News